Poetry

Chithrakathi Paintings on Bharatha-K-Koothu

Arjuna introduces  Subhadra to Draupadi as a milk maid

Gushes
down
like a cascade
my lust
in a single woman
Ram visualized
a thousand
but I
through
a thousand women
am searching
the one
ever

புனல் போல்
இறக்கத்தில்
குதித்ஹ்தோடுகிறது
என் காமம்
ஒரு பெண்களை
கண்டிருப்பான்
ராமன்
நான்
ஆயிரம் பெண்களின்
ஊடாக
ஒருத்தியைத் தீராமல்
தேடுபவன்

Abhimanyu in the womb listens to Arjuna’s secret about the Chakravyham

The womb
that you are now in
is the safest
place
in the world
that’s your core
the moon as the witness
we three
this night
are in union
this happy moment of bliss
engulfed under turmoil
that’s it
later
lies our destiny to
tangle in the labrynth
where we shatter
and vanish

இப்போது நீ இருக்கும்
கருப்பைதான்
உலகிலேயே
பத்திரமான
இடம்.
அது தான்
உன் மையம்
நாம் மூவரும்
இந்த இரவில்
நிலவின் சாட்சியாய்
இணைந்திருக்கிறோம்
ஒரு பெரும் குழப்படியின்
ஆசீர்வாத மகிழ்ச்சிகணம் இது
அவ்வளவே
அப்புறம்
நாம்
வட்டப்புதிர் வழிகளுக்குள்
துகள்துகளாய்
தொலைந்துதான் போவோம்.


Arjuna and Krishna admire the might of Abhimanyu

Throughout Bharatham
Angam
Vangam
Kalingam
as countries
as kingdoms
as cities
as small villages
does exist
as a Kashi at every corner
the all powerful
Abhimanyus too.

 

பாரதமெங்கும்
அங்கம்
வங்கம்
கலிங்கம்
தேசங்களாகவும்
ராஜ்ஜியங்களாகவும்
நகரங்களாகவும்
சிறுகிராமங்களாகவும்
உண்டு
மூலைக்கொரு காசியைப் போல
வல்லமை மிக்க
அபிமன்யுக்களும்தான்.

Abhimanyu Humiliates Drona as he approaches Dharmaraja for a talk

Natural justice
is the one that
freezes all
knowing not
what to do

பொதுநீதி என்பது
மக்கள்
அனைவரும்
செய்வதறியாமல்
உறைந்திருக்க
வழங்கப்படுவது

Enactment of the might of Abhimanyu in the chakravyuha.  Posing of the artiste as Abhimanyu after his limbs are cut

caught in the maze
again
a child
like a ball of life
spins in the Warfield
taking the arms
and the armaments
as his toys
soon entered he
into the Kurukshethram
insighting
chakravyuha
woven by
Draupadi and Duriyodhana
on the first strike
of the iron mace
for sure
his childhood innocence
would he have discarded

புதிர்வழிக்குள்சிக்கி
மறுபடியும்
ஒரு குழந்தை
உயிர்ப்பந்தைப் போல்
போர்க்களத்தில் சுழல்கிறது
ஆயுதங்களையும்
யுத்தத்தையும்
பொம்மைகளாய் பாவித்து
குருக்ஷேத்திரத்திற்கு
மிகச்சீக்கிரமாகவே
வந்துவிட்டான்
திரெளபதையும்,
துரியோதனனும்
சேர்ந்துவரைந்த
சக்கரவியூகம்
அது என்று தெளிந்தான்
இரும்பு கதையின்
முதல் பிரயோகத்தில்
நிச்சயம் அவன்
தன் குழந்தைமை
துறந்திருப்பான்.

Announcing the pregnancy of Sundari during bereavement

Abhimanyu’s
swiftness and sharpness
as I notice
he sleeping gracefully,
as I see
in my oblivion
the glimpse of him as a corpse
I have imagined
am I the only mother
brooding over
that thought?
holding his head
gently fondling his hair
at times
his death
I felt in my fingers
how
for this
am I responsible?

அபிமன்யுவின்
வேகத்தையும்
துறுதுறுப்பையும்
பார்க்கும்போதும்
அவன் உறங்கும் அழகைப்
பார்க்கும் போதும்
என்னையும் அறியாமல்
அவனின்
பிணக்கோலத்தையும்
நான் கற்பனை செய்துள்ளேன்
அப்படி எண்ணி
வருந்திய தாய்
நான் மட்டும்தானா?
அவனின் தலையை பிடித்து
கோதும்போது
சில நேரங்களில்
அவன் மரணம்
என் விரல்களில்
தட்டுப்பட்டுள்ளது
அதற்கு நான் எப்படி
பொறுப்பாவேன்?

Krishna as Mohini challenges Arjuna on the way to penance

in every woman
searched I
a bird
as a wandering hawker
unmoved
by the call of the peacock
not raining
as the downpour
going my way
is not my nature
nonetheless
for me the Arjuna
bless my way and leave the path
oh! Mohini!

ஒவ்வொரு பெண்ணிலும்
ஒரு பறவையைத்
தேடி
அலையும்
வேடன்தான் நான்.
மயில்விடுக்கும் அழைப்புக்கு
இறங்கி
மழையாகாமல்
என் வழி செல்வதும்
என் சுதர்மம் இல்லைதான்
ஆனாலும் இந்த
அர்ஜூனனுக்கு
அருள் காட்டி வழிவிடு
மோகினி

Perandai pleas to Arjuna for Sparing Perandan

the noble path
as described
in the way
through the woods of bliss
neither natural
nor magnanimous
innumerable hardships
there exist
where arose Kurukshethrams
that kills
even the subtle wishes
and desires

நல்வழி
என்று கூறப்படும்
அருள் வனத்தின் பாதையில்
இயல்பும்
அழகும் இல்லை
எத்தனை சிரமங்கள்
அங்கேதான்
எத்தனையெத்தனை
சின்னஞ்சிறிய
விருப்பங்களைக் கொல்லும்
குருக்ஷேத்திரங்கள்

Yellamma in wait for Arjuna, to return after getting Pashupatha, to marry her

None
in my seperation
do I let
to wait longing
going pale
yet
you
are destined to wait
the trident
the noose
the turmeric
be seated alongwith.
shall seek your father
and return with the Pashupatha
Ellamma

யாரும்
காத்திருந்து
பசலைபூக்க
அனுமதியேன் எனக்காக.
ஆனாலும்
நீ
காத்திருக்கத்தான் வேணும்.
மூவிலை
சூலம்
வீரசட்டை
வீரகந்தத்துடன்
அமர்ந்திரு.
உன் தந்தையைப் பார்த்து
பாசுபதம் பெற்று வருகிறேனே
எல்லம்மா

Arjuna performer climbing the ‘Tapas mararam’  amidst the folks gathered for vows and prayers

The child of desire you are
Arjuna
crossing temptations
climbing the kailasa
the mountain of penance
on a point
your focus
the merging..
on the pinnacle of bliss
waits
the endless
blessings

ஆசையின் குழந்தை நீ
அர்ஜூனா
சபலங்கள் கடந்து
தியானம் என்னும்
கைலாயம் ஏறி
ஒரு பொருளில்
நீ குவிவது
யோகம்..
யோகத்தின் உச்சியில்
காத்திருப்பது
அளவற்ற
ஆசீர்வாதம்

Arjuna combats with Shiva as Kiratha for the Boar

It is that five
that makes
you wander
it is that five
that chases
you to gasp
it is that five
that splits into two
you
god
makes you roll on the ground
mind
vision
only then
the weapon
Arjuna

 அந்த ஜந்துதான்
உன்னை
அலைய வைக்கும்
அந்த ஜந்துதான்
உன்னை
துரத்தி
மூச்சிரைக்க வக்கும்
அந்த ஜந்துதான்
உன்னையும்
கடவுளையும்
இரண்டாக்கி
தரையில் புரளவைக்கும்
மனம்
கண்கள்
பின்புதான்
அஸ்திரம்
அர்ஜீனா

Draupadi and Bhima laugh and mock Duriyodhana’s illusion

Dark granite palace
golden canopies
like a pool
the shining floor
the walls
the chambers
reflecting
every other
faces
stand magnificent
the palaces
amusing over
other’s pain
still exist.

 கருப்புக்கல் மாளிகை
தங்க விதானங்கள்
தடாகம் போல்
பளபளக்கும் தரை
சுவர்கள்
அறைகள்
முகங்கள் எல்லாம்
ஒன்றையொன்று
பிரதிபலித்து
உயர்ந்து நிற்கும்
மாளிகைகள்
பிறர் வலி
கண்டு நகைப்பது
இன்னமும் உண்டு

Duryodhana, Shakuni, Dushasana and Karna plot to deceive the pandavas

The dice
do not
converse
the dice
do not
spin plots
the dice
being made of dried bones
are devoid of blood

 பகைடகள்
ஒன்றுக்கொன்று
பேசிக்
கொள்வதில்லை
பகடைகள்
சதியாலோசனை
செய்வது
இல்லை.
பகடைகள் உலர்ந்த
எலும்பாலானவை
அங்கே ரத்தம் இல்லை.

Dharmaraja loses the game of Dice

It is my habbit
that
makes
others define me
it is my habbit
that rules over
powers
invasions
addictions
relations.
one can say
that I am
this habbit

 

 என்னுடைய பழக்கங்கள்
தான்
என்னை
பிறரின் வரையறைக்கு
உள்ளாக்குவது.
என்னுடைய
பழக்கம் தான்
அதிகாரம்
ஆக்கிரமிப்பு
போதை
உறவுகளில்
ஆதிக்கம் செலுத்துகிறது
இந்தப் பழக்கம்தான்
நான் என்றும்
ஒருவர் சொல்லலாம்

Dushasana drags Draupadi from her chamber

As she weeps in sorrow
the groan
colours the world
with embers
being deprived
one sob from her
the floor slips
under my foot
mercy mercy
as the unknown
pleads
helplessness
makes the shoulders pain
wherever women weep
is that the court of the Kauravas?

 துயரத்தில் அழுபவளின்
தேம்பலில்
உலகத்திற்கு சாம்பல் நிறம்
வந்துவிடுகிறது
கைவிடப்பட்ட
அவளின் ஒரு கேவலில்
என் காலுக்குக் கீழ்ழே
தரை நழுவத்தொடங்கிறது
கருணை கருணை
என்று
முகம் தெரியாதவள்
இறைஞ்சும் போது
இயலாமையில்
தோள்வலிக்கிறது
பெண் அழும் ஒவ்வொரு
இடமும்
கெளரவர் சபைதான்னோ

The stage enactment of plot against Pandavas before Virata parvam

than the brothers,
the wives,
the friend,
time and ever
dwelling in my
thoughts
are the foes
thus is my existence.
In that manner
they are obliged to me

 

 தம்பிகளைவிட
மனைவியரைவிட
நண்பனைவிட
சதாசர்வகாலமும்
எதிரிகளே
நினைவில்
நிறைந்திருக்கும்படியானது
என் இருப்பு.
அந்த வகையில் அவர்கள்
என்க்கு கடன்பட்டவர்கள்

Draupadi as Kuravanchi with Sahadeva as a baby on the streets of Hastinapura

Not to tell a good fortune
walked
the Kuravanji
down the roads of Hastinapura
Kurukshethram has begun
in her basket
are there
people’s healing
medicine
tiger’s claw
string of wisdom
she has
not one good message
to tell the Kauravas.

 

 நற்குறி சொல்ல வரவில்லை
குறவஞ்சி
அஸ்தினாபுரத் தெருக்களில்
நடந்தாள்
குருக்ஷேத்திரம் தொடங்கிவிட்டது
அவளின் கூடையில்
மக்கள் குறைதீர்க்கும்
மருந்துகள்
புலிநகங்கள்
ஞானக்கயிறு
எல்லாம் இருக்கின்றன
கெளரவர்களுக்குச் சொல்ல
அவளிடம் ஒரு
நற்செய்தி கூட இல்லை.

Draupadi fore tells the fate of Kauravas to Kunti and Perunthiruval

Death,existence
events
the kuravanji I am
have come to tell fortune
of the past, present and
future
in the royal palace
of Hastinapura
the uncontrollable tears
a woman has shed
shall drown
your husbands.

 இறப்பு இருப்பு
நிகழ்வு
என்று முக்காலமும்
உரைக்க வந்த
குறத்தி நான்
அஸ்தினாபுர
அரண்மனையில்
ஒருவள் ஆற்றாது
வடித்த கண்ணீர்
உங்கள் கணவர்களை
மூழ்கடிக்கும்.

Draupadi challenges Duriyodhana announcing his destiny

though has
come in disguise
naive he isn’t
to gaze at
the face of the great destiny
in her malevolence
his face
spotted,
death
has started to

 மாறுவேடத்தில்
வந்தாலும்
பெரும் கூற்றின் முகம்
தெரியாதவனா
அவன்
அவள் வன்மத்தில்
தன்முகம்
பார்த்துவிட்டான்
மரணம்
மொய்க்கத்
தொடங்கிவிட்டது

Arjuna as a Kuravan defeats Duryodhana and rescues Draupadi from prison

At times
I be a woman
and he
as a man
does come
to my rescue
in such moments
when I
am imprisoned

 சில நேரங்களில்
நான் பெண்ணாகவும்
அவன்
ஆணாகவும்
இருப்பதுண்டு
அப்போது
நான்
சிறையிருக்கும்
வேளையில் அவன்
என்னை மீட்க
வருவதுண்டு

Krishna makes a miracle telling Draupadi to sow the roasted seeds

as hunger subsides
war arise
as war subsides
hunger arise

 பசி தீர்ந்துவிட்டால்
போர் வரும்
போர் தீர்ந்துவிட்டால்
பசிவரும்

Draupadi becomes the goddes of grains

In Draupadi’s
wetland
the roasted grains
in green and red
flourished bountiful.
marking the day
she awaits.

 திரெளபதியின்
ஈரநிலத்தில்
வறுத்த விதைகளும்
பச்சையும் சிகப்புமாக
பெருகிக் குலுங்குகிறது.
அவள் நாள்குறித்து
காத்திருக்கிறாள்

Duryodhana requests Aravan for ‘Kala bali’

ask whatever you desire
Dhuriyodhana
down the history
I am
the first
named
‘bali’
I have not myself
chosen anything
my name is Aravan

என்ன வேண்டும் கேள்
துரியோதனா
வரலாற்றில்
நான் தான்
முதல்
பெயர்கொண்ட
பலி
நானாக எதையும்
தேர்ந்தவன் அல்ல
என் பெயர் அரவான்

Making of the Aravan

The present
is not for the martyr
also for the sacrifice
after the martyrdom
there arose
freedom
rule
nation
ambitious society
in all
the martyr
has a small role
hence
the martyrs
are shot
amidst
the forests
burn down to death
the history demands
always
the martyrs like me
it is we
who cast a longing eye
over the future

தியாகிக்கு நிகழ்காலம்
இல்லை
தியாகத்துக்கும் தான்
தியாகியின் மரணத்துக்குப்பின்
உருவாகும்
சுதந்திரம்
அரசாட்சி
தேசம்
லட்சிய சமூகம்
எதல்லாவற்றிலும்
தியாகிக்கும்
சிறு பங்குண்டு
அதனால்
தியாகிகள்
வனத்தின்
நடுவில் சுடப்படுகிறார்கள்
எரிந்து மாய்கின்றனர்
வரலாற்றுக்குத் தேவை
எப்போதும்
என்போன்ற தியாகிகள்
நாங்கள் எதிர்காலத்தின் மீது
ஏக்கத்தோடு
கண் வைத்திருப்பவர்கள்

Aravan installation all set for the ‘Kala bali’ event

Your longing I it is
your dream I it is
your desire I it is
your remains I it is
your forgetfulness I it is
your spends I it is
it is you
who made me Aravan

உங்களின் ஏக்கம் நான்
உங்களின் கனவு நான்
உங்களது ஆசை நான்
உங்களது கழிவும் நான்
உங்களது மறதி நான்
உங்களது செலவு நான்
என்னை அரவானாக்கியது
நீங்கள்தான்.

Krishna as Mohini marries Aravan

earlier
my self immolation
was desired by
the foe
and now my self immolation
is demanded by
ties of blood
grandfather
father
uncle
ofcourse all
as for me
the pandavas
the kauravas
none differ

 

முதலில் என் உயிர்பலியைக் கேட்டவன்
எதிரி
தற்போது என் உயிர்பலி
கேட்பவர்கள்
ரத்தபந்தங்கள்
தாத்தா
அப்பா
மாமா
எல்லாரும்தான்
என்னைப் பொருத்தவரை
பாண்டவருக்கும்
கௌரவருக்கும்
வித்தியாசமமேயில்லை

The rituals of ‘Aravan Kalabali’

In the warfare
in the royal feasts
in coupulation on bed
in the city corners
in the assembly
my eyes
follow you

 

யுத்தத்தில் பொருதும் போது
அரண்மனை விருந்துகளின் போது
படுக்கையில் கூடும்போது
நகர மூலைகள்
ஆட்சிக்கூடங்களில்
உங்களை
என் கண்கள் தொடரும்

Fight of Aravan and Alambhujan on the eighth day of Mahabharatha

In sacrifice
my body I destroyed
with those snakes
of desire
I battled for just a day
I am but a warrior
for once tried copulating
handsome with
all perfect features,
but for death
everything
was given
in a reserve
to me
the Aravan

தியாகத்தில்
என்னுடல் அழித்தேன்
ஆசையின்
பாம்புகள் கொண்டு
ஒரேயொரு நாள் போர் செய்தேன்
ஆனால் நான் வீரன்
ஒரேயொரு முயல் புணர்ச்சி
ஆனால் சகல லட்சணங்கள்
பொருந்திய அழகன்
மரணத்தைத் தவிர
எல்லாமே
அளந்து
வழங்கப்பட்டவன்
இந்த
அரவான்.

Aravan views the war

Lust alone
like a wheel
in the battlefield spins
and revolves
as Draupadi,
drinking the blood
not a drop
left,
thus I see

காமம்தான்
சக்கரமாக
யுத்தகளத்தில் சுற்றி
சுழல்வதையும்
திரௌபதையாக
ஒரு சொட்டுகூட
மிச்சமின்றி
ரத்தம் குடிப்பதையும்
பார்க்கிறேன்

Kunthi floats karna in the river and he is brought up by the charioteer

When abandoned
down the river
the then felt
chill and loneliness
till its death
the story
that continues
over
and again
the children

 

ஆற்றில்
கைவிடப்பட்ட போது
உணர்ந்த
தனிமையும் குளிர்ச்சியும்
அதன் மரணத்தருவாய்
வரை தொடரப்போகும்
கதை இது
மறுபடியும்
மறுபடியும்
இந்தக் குழந்தைகள்

Parashurama curses karna for deceiving him of his race

My birth
my parents
my identities
chosen not I
even my friends
my deeds
go similar
being so
this is the destiny
this is the curse
at times
as I ponder
how can I
be accused ?

என் பிறப்பை
எனது பெற்றோரை
எனது அடையாளங்களை
நான் தேர்வு செய்யவில்லை
என் நண்பர்களையும் கூட
எனும்போது
இதுவே விதி என்றும்
அதுவே சாபம் என்று
நான் ஒருபொழுதேனும்
எண்ணுவதை
உங்களால் எப்படி
குறை கூற முடியும்?

Ponnuruvi dreams bad omens

The air
is not humid
dishes spill off
pictures hung
fall off the wall
friend went saying
shadow of the plantain
is seen
in the kitchen
the shadow
of a huge raven
engulfs the house

 

காற்றில்
ஈரம் இல்லை
பதார்த்தங்கள் சிந்துகின்றன
படங்கள் சுவரிலிருந்து
கழன்று விழுகின்றன
வாழைமரத்தின் நிழல்
சமையலறையில்
தெரிவதாக
தோழி கூறிப்போனாள்
பெரிய அண்டக்காக்கையின்
நிழல்
வீட்டைச் சூழ்கிறது
இருட்டு.

Gandhari forces the delivery of  Kauravas

Also it makes you wait
for your tears
it may be the reason
for some
born as unwanted guests
are those infants

The reality
that chases us
can be noted as the kaurava infantry
so being
mind as the womb
men women for all
be it common

 

காத்திருக்கவும் வைக்கும்
கண்ணீருக்கும்
காரணமாகும்
சிலருக்கு வேண்டாத
விருந்தாளிகளாய் பிறக்கும்
குழந்தைகள்

நம்மைத் துரத்தும்
எதார்த்தத்தை கௌரவப்படை என்றும்
உரைக்கலாம்
மனம் என்னும் கர்ப்பம்
கொண்ட
ஆண்,பெண் யாவருக்கும்
இது பொதுதானே.

Nagakkanni recommends Aravan to help Perun thiruval to rescue Duryodhana

Thus spoke Uloopi
to her son Aravan
in the epics
the destiny is already
decided upon,
my son,
like your fate
hence
go and save
the Kauravas

உலூபி தன் மகன் அரவானுக்குச் சொன்னது:
காப்பியத்தில்
எல்லாம் ஏற்கனவே
தீர்மானிக்கப்பட்டது
மகனே
உன் விதியைப் போல
அதனால்
கௌரவர்களைப் போய்
காப்பாற்று

Duryodhana refuses even the space of a needle tip for the Pandavas

Dance
till the stage exhausts
good and evil
unaware
dwell
in self set determination
for others
leave not space
you encroach
mountains springs
spare not anything
stretch the net
be a monopolist
no need to feel the self uglyness
no apetite yet devour
mate
the mighty lives
thus speak accomplishment

 

 

ஆடு
மேடை தீரும் வரை
நன்மை தீமையின்
போதமற்று
தன் நிச்சயத்தில்
திளை
பிறனுக்கு
துளிகூட இடம் வைக்காமல்
அகன்று ஆக்கிரமி

மலைகள், நீர்நிலைகள்
எதையும் விட்டுவைக்காதே
வலைகளை நீட்டு
ஏகபோகம் செய்
சுயஅருவருப்பு வேண்டாம்
பசியில்லையெனினும் புசி
புணர்
வலியவன் வாழ்வான்
என்று
வித்தகம் பேசு

Ghandhari tirs to strengthen Duryodhana by her gaze while Krishna makes a fowl play

Why you shy
nudity
in front of
your mother…
can
with a leaf
with a flower
be hidden
the child nudity
dont you remember
like a banana
were you with her
oh! you too devoured
the forbidden fruit?

 

 

அம்மாவுக்கு
முன்னால்
நிர்வாணம் காண்பிக்க
உனக்கு என்ன வெட்கம்…
இலை கொண்டு
பூ கொண்டு
அவளிடம்
மறைக்க முடியக்கூடியதா
பிள்ளை நிர்வாணம்
நீ சிசுவாக வாழைப்பழம் போல
அவளிடம் தானே இருந்தாய்
ஞாபகம் இல்லையா
நீயும் உண்டாயா
அந்த விலக்கப்பட்ட கனியை?

Duryodhana hiding under water chanting the Sanjeevani mantra

The pond
that dissolves the self conceit
for sometime
it is good
to be in the state
of failure.
Fish
Tortoise
birds
snakes
beings inferior
a chance for once
to converse with those

சுயபோதை தெளியும்
குளம்
தோல்வியில்
சிறுகணமாவது
இருப்பதும்
நல்லதே..
அவனைவிட
சிற்றுயிர்களான
மீன்
ஆமை
பறவை
பாம்புகளோடு
பேச
இது ஒரு சந்தர்ப்பம்.

Making of Periandavar (Duryodhana) for the ‘Padukalam’ rituals

Action collapsed
action stopped its breadth
action discards desire
action’s blood clots
action’s tension reduced
between the good and evil
action merges
perished action nurtures the soil
his deeds uphelds him a martyr

 

 

செயல் விழுந்தது
செயல் தன் மூச்சை விட்டது
செயல் தன் ஆசை நீத்தது
செயலின் ரத்தம் உறையப்போகிறது
செயலின் பதற்றம் தணிந்தது
தீமையும் நன்மைக்கும் இடையே
செயல் முயக்கம் கொண்டது
மடிந்த செயல் மண்ணில் உரமாகும்
அவன் செயல் அவனை அமரனாக்கியது

The final combat between Duryodhana and Bhima enacted on the streets making the whole village the kurukshethra

Enemy
if sensed
outside
destined to gasp
chasing about
down the streets
ultimately

 

எதிரியை
வெளியிலே
பாவித்துக்கொண்டால்
தெருத்தெருவாய்
ஓடித் துரத்தி
கடைசிவரை
மூச்சுவாங்கத்தான்
வேணும்

Shakuni  plunders the corpse of Duryodhana turning a fox,   avenging the evil done to his people  by the Kauravas

Duriyodhana
the name
of violence you nurtured
is Shakuni
hunger and tears
transform into wolves
the stories of blood thirst
to this day exists in Bharatham

துரியோதனன்
ஊற்றி
வளர்த்த வன்மத்தின்
பெயர்
சகுனி
பசியும் கண்ணீரும்
ஓநாய் வடிவமெடுத்து
பிறகு
ரத்தம் பருகும் கதைகள்
பாரதத்தில் இன்றும் உண்டு.